செயற்கை நுண்ணறிவு பயிற்சி

விருதுநகர்: பள்ளிக்கல்வித் துறை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் சார்பில், விருதுநகர் செந்தில்குமார நாடார் கல்லுாரியில் முதுகலை இயற்பியல் ஆசிரியர்களுக்கான செயற்கை நுண்ணறிவு பயிற்சி முகாம் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.

அக். 26 முதல் அக். 29 வரை நடைபெற்ற இப்பயிற்சியில் 105 முதுகலை இயற்பியல் ஆசிரியர்கள் பங்கேற்றனர். பாலையம்பட்டி மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி தலைமை வகித்தார். துணை முதல்வர் வெங்கடசாமி வரவேற்றார். முதுநிலை விரிவுரையாளர் அழகப்பன் பயிற்சியின் முக்கியத்துவம், நோக்கங்கள் குறித்து விளக்கினார். இப்பயிற்சியில் முதுகலை ஆசிரியர்கள் கருப்பையா, ரமேஷ், ராம்குமார், திருக்குமார் ஆகியோர் கருத்தாளர்களாகச் செயல்பட்டு தொழில்நுட்பப் பயிற்சிகளை வழங்கினர். முதுநிலை விரிவுரையாளர் அம்பிகா நன்றிக்கூறினார்.

Advertisement