பி.டி.ஓ., ஆபீஸ் முன் குடிநீர் கேட்டு தர்ணா

அரூர்:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கே.வேட்ரப்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட எச்.ஈச்சம்பாடி சந்தைதோப்பு பகுதியில், 15க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிகின்றனர்.

இவர்களுக்கு குடிநீர் வசதி இல்லாததால், அரூர் - திருப்பத்துார் தேசிய நெடுஞ்சாலையை கடந்து, எதிரிலுள்ள குடியிருப்பு பகுதிக்கு சென்று தண்ணீர் பிடித்து வருகின்றனர். அவ்வாறு வரும்போது விபத்தில் சிக்கும் நிலையுள்ளது. குடிநீர் வசதி செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் பஞ்., நிர்வாகம் மற்றும் அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன், நேற்று பகல், 12:45 மணிக்கு அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அதிகாரிகள் குடிநீர் வசதி செய்து தர, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தை அடுத்து, 1:15 மணிக்கு பெண்கள் கலைந்து சென்றனர்.

Advertisement