தங்கத்தின் தேவை சரிவால் விலை குறைய வாய்ப்பு!
- நமது நிருபர் -
தங்கத்தின் விலை அதிகமாக இருப்பதால், நம் நாட்டில் நகைகள் மற்றும் முதலீட்டுக்காகவும் தங்கம் வாங்குவது குறைந்துள்ளது. இதனால், 2026ம் ஆண்டில் நாட்டின் தங்கம் தேவை 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரியக்கூடும் என உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
விலை உயர்வு, இறக்குமதி வரி அதிகரிப்பு, வாங்குதலை கட்டுப்படுத்துவது தொடர்பான பிரதமரின் வேண்டுகோள் உள்ளிட்ட காரணங்களாலும் தங்கத்துக்கான தேவை குறைந்துள்ளதாகவும் உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது.
தீபாவளி மற்றும் திருமண சீசன் காரணமாக, அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் தங்கம் தேவை ஓரளவு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், விலை உயர்வு தொடர்ந்தால், குறைந்த எடை கொண்ட நகைகளை வாங்குவது, பழைய தங்கத்தை மாற்றி புதிய நகைகள் வாங்குவது போன்ற வழிகளை மக்கள் நாடலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.


தங்கத்துக்கான தேவை குறைந்து வருவதாக தரவுகள் கூறும் நிலையில், கமாடிட்டி வர்த்தகர்கள் தங்கத்தை எப்படி அணுக வேண்டும் என 'காம்ட்ரென்ட்ஸ்' நிறுவனத்தின் இயக்குநர் ஞானசேகரனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
தற்போதைய நிலையில், 10 கிராம் தங்கத்தின் விலை 1,38,000 ரூபாயிலிருந்து சரிந்து, 1,30,000 ரூபாய் முதல் 1,25,000 ரூபாய் வரை குறைய வாய்ப்புள்ளது.
டாலரின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களும், ஏ.ஐ., சார்ந்த பங்குகளில் ஏற்படும் சரிவும் தங்கத்தின் விலையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். ஒட்டுமொத்தமாக, தங்கத்தின் விலை இறங்குமுகத்தில் தொடர்வதற்கே அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், அமெரிக்க செனட் தேர்தல் முடிவுகளை பொறுத்து விலையில் மாற்றங்கள் ஏற்படலாம் என்பதால், அடுத்தகட்ட நகர்வை தீர்மானிக்க தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை
-
புதுச்சேரியில் தங்க கட்டி விற்பதாக கூறி ரூ. 2.5 கோடி மோசடி: 11 பேர் மீது வழக்கு
-
க.அலம்பளம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வினாடி வினா போட்டி
-
ஏமப்பேர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ‘தினமலர் – பட்டம்’ இதழ் வழங்கல்
-
தேசிய ஜூனியர் தடகளப் போட்டி தமிழக அணி வெள்ளி பதக்கம்
-
மின்னணு வாழ்வு சான்றிதழை வீட்டிலிருந்தே பதிவு செய்யலாம்: அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்
Advertisement
Advertisement