மழை காலத்திலும் கைவிடாத சூரியசக்தி மின் உற்பத்தி 8,818 மெகாவாட்டாக உச்சம்
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை சீசன் தொடங்கியும் வெயில் நிலவுகிறது. இதனால், சூரியசக்தி மின் நிலையங்களின் உற்பத்தி எப்போதும் இல்லாத வகையில், நேற்று முன்தினம், 8,818 மெகாவாட்டாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
நாட்டில், சூரியசக்தி மின் நிலையங்கள் அமைக்க சாதகமாக உள்ள மாநிலங்களில், தமிழகம் முன்னணியில் உள்ளது. தனியார் நிறுவனங்கள் தங்கள் சொந்த நிலத்தில், 1 மெகாவாட்டுக்கு மேல் சூரியசக்தி மின் நிலையங்களை அமைக்கின்றன. வீடு, கல்வி நிறுவனங்களில் குறைந்த திறனில், மேற்கூரை சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்படுகிறது.
தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி, ஒட்டுமொத்த சூரியசக்தி மின் நிலையங்களின் உற்பத்தி திறன், 14 ஆயிரத்து 717 மெகாவாட்டாக உள்ளது. தினமும் சராசரியாக, 6,500 – 7,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.
இம்மாதம் வடகிழக்கு பருவ மழை சீசன் தொடங்கியும் வெயில் நிலவுகிறது. சூரியசக்தி மின் உற்பத்திக்கு வெயிலின் வெப்பத்தை விட, வெளிச்சமே முக்கியம். இதனால், சூரியசக்தி மின் உற்பத்தி எப்போதும் இல்லாத வகையில், நேற்று முன்தினம், 8,818 மெகாவாட்டாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதற்கு முன், கடந்த செப்., 29ல், 8,779 மெகாவாட்டு தான் உச்ச அளவாக இருந்தது.
மாண்புமிகு தளபதி விஜய் அவர்களின் தலைமையிலான தமிழக அரசு புதுப்பிக்கத்தக்க பசுமை மின்சாரத்திற்கு முதல் மரியாதை கொடுத்து ஊக்குவிப்பது அனைவரும் அறிந்ததே. இந்த செய்தியின் தொடர்ச்சியாக, சனிக்கிழமை அதாவது அக்டோபர் மாதம் 31ம் தேதியன்றும் சூர்ய ஒளி மின்சார உற்பத்தி 8000 மெகா வாட் என்ற அளவை தாண்டியுள்ளது.
இது சூர்ய ஒளி மின்சார உற்பத்தியாளர்களை குஷி படுத்தியுள்ளது. எல் நினோ என்று சொல்லப்படும் பருவ நிலை காரணத்தினால் வரும் மாதங்களிலும் இந்த சரித்திர சாதனை உற்பத்தி தொடரும் என்று ஆணித்தரமாக நம்பலாம்.
அதே சமயம் குறைந்து போன மழையளவு பெரும் கவலைக்குரியது, ஏனெனில் பலரது வாழ்வாதாரம் மழை சார்ந்த விவசாயத்தை சார்ந்துள்ளது.மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு