மின்கம்பத்தில் ஏறிய ஒப்பந்த ஊழியர் மின்சாரம் தாக்கி பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மின்கம்பத்தில் ஏறிய தனியார் நிறுவன ஊழியர் மின்சாரம் தாக்கி பலியானார்.
நத்தம் ஒன்றியத்தில் வீடுகள் மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மின்சாரத்தை பிரித்து விநியோகிக்கும் ஆர்.பி.எஸ்., ஒழுங்குப்படுத்தப்பட்ட மின்விநியோக திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதனை திருச்சியை சேர்ந்த தனியார் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இந்நிறுவனம் நத்தம் அருகே குடகிப்பட்டி ஊராட்சி குப்பிலிப்பட்டியில் பழைய மின்கம்பங்களை அகற்றிவிட்டு புதிய மின்கம்பங்களை அமைக்கும் பணிகளை மேற்கொண்டது. இதில் ஈடுபட்ட நிறுவன ஊழியர் பீஹார் மாநிலத்தை சேர்ந்த ரோஹித்குமார் 24, மின் இணைப்பை துண்டிக்காமல் மின்கம்பத்தில் ஏறினார். அப்போது மேலே செல்லும் உயரழுத்த மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி பலியானார்.
மின்வாரிய ஊழியர்கள் மின்இணைப்பை துண்டித்து விட்டு உடலை கீழே இறக்கினர். உடலை கைப்பற்றிய நத்தம் போலீசார் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாவட்ட மின்வாரிய செயற்பொறியாளர் (பொது) நாகராஜன் கூறுகையில், ‘மேற்பார்வை கண்காணிப்பு பொறியாளர் உத்தரவில் ஆர்.பி.எஸ்., திட்ட ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர்களிடம் நடந்த சம்பவம் குறித்து அறிக்கை தர கேட்டுள்ளோம். அது கிடைத்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
மேலும்
-
மாயமான சிறுமிகள் மீட்பு
-
பேஸ்மேக்கர் சிகிச்சையின் நவீன முன்னேற்றங்கள் கல்வி நிகழ்ச்சி
-
அமெரிக்கா நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் 2 நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்போம்; ஈரான் அறிவிப்பு
-
நேதாஜி சுபாஷ் சாலையை அகலப்படுத்த அரசு முடிவு
-
அகில இந்திய மகளிர் டி 20 கிரிக்கெட் எலைட் பிரிவில் கேரளா வெற்றி
-
செல்ல பிராணிகள் ஞாயிறு சந்தைக்கு தடை எதிர்ப்பு தெரிவித்து பிராட்வேயில் போராட்டம்