அமெரிக்கா நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் 2 நாட்களில் ஹார்முஸ் ஜலசந்தியை திறப்போம்; ஈரான் அறிவிப்பு

2

-நமது நிருபர்-

ஈரான், அமெரிக்கா இடையேயான போர் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் தொடரும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியில் வர்த்தக கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது.

அமெரிக்கா தனது நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், ஹார்முஸ் ஜலசந்தியை இரண்டு நாட்களுக்குள் மீண்டும் திறக்கத் தயாராக இருப்பதாக ஈரான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கத்தார் நாட்டின் தூதரக மத்தியஸ்தர்கள் மூலமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்த முடிவை ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி உறுதிப்படுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவப் படைகளைக் குறைத்தல், ஈரானின் கச்சா எண்ணெய் ஏற்றுமதி மீதான தடைகளில் இருந்து விலக்கு அளிப்பது, கத்தார் உட்பட வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ள ஈரானிய நிதிகளை விடுவிப்பது உள்ளிட்ட நிபந்தனைகளை அமெரிக்காவுக்கு ஈரான் விதித்துள்ளது.

அதிபர் டிரம்ப் இந்த பேச்சுவார்த்தை சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்று கூறினாலும், ஒப்பந்தம் இன்னும் எட்டப்படவில்லை. நிபந்தனைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளும் வரை ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படாது என்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.

Advertisement