பேஸ்மேக்கர் சிகிச்சையின் நவீன முன்னேற்றங்கள் கல்வி நிகழ்ச்சி
புதுச்சேரி: இந்திய மருத்துவ சங்கத்தின் புதுச்சேரி கிளை சார்பில் பேஸ்மேக்கர் சிகிச்சையின் நவீன முன்னேற்றங்கள் குறித்த தொடர் மருத்துவக் கல்வி நிகழ்ச்சி, ரெசிடென்சி டவர்ஸ் அரங்கில் நடந்தது.
இந்திய மருத்துவ சங்கத்தின் புதுச்சேரி தலைவர் சுதாகர், மாநில செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினர். சென்னை காவேரி மருத்துவமனையின் மூத்த இதய மின்னியக்கவியல் நிபுணர் தீப் சந்த் ராஜா பங்கேற்று, இரு அறை லீட்லெஸ் பேஸ்மேக்கர் தொழில்நுட்பத்தில், இதயத்தின் வலது மேலறை மற்றும் கீழறையில் பொருத்தப்படும் இரண்டு சிறிய கருவிகள், மின் இணைப்பு கம்பிகள் இல்லாமல் இரு அறைகளின் துடிப்பையும் ஒருங்கிணைக்க உதவுகிறது.
இதயத்தின் இயற்கையான மின் கடத்தல் பாதைகளை துாண்டும் கண்டக் ஷன் சிஸ்டம் பேசிங் சிகிச்சையின் முக்கியத்தும் குறித்து எடுத்துரைத்தார்.
ஹிஸ் பண்டில் பேசிங் மற்றும் இடது பண்டில் கிளைப் பகுதி பேசிங் ஆகிய முறைகள், பொருத்தமான நோயாளிகளின் இதயத் தசைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டைப் பாதுகாக்க உதவக்கூடும் எனவும் விளக்கினார்.
இதய சிகிச்சை நிபுணர்கள், பல்வேறு துறைகளை சேர்ந்த டாக்டர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.