தொழிலாளி வீட்டில் திருடியவர் கைது
கரூர்:கரூர்
மாவட்டம், புகழூர் நான்கு சாலை பகுதியை சேர்ந்தவர் சம்பத்குமார், 67;
ஓய்வு பெற்ற புகழூர் காகித ஆலை தொழிலாளி.
இவர் கடந்த செப்., 23ல் வீட்டை
பூட்டி விட்டு, மனைவி ஆண்டாள், 56, என்பவருடன் சென்னை தாம்பரத்தில்
உள்ள, மகன் வீட்டுக்கு சென்றுவிட்டார். பின், கடந்த அக்., 9ல்
வீட்டுக்கு சென்றபோது கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேலும்,
வீட்டில் இருந்த, 20,000 ரூபாய், ஒரு கிராம் மோதிரம் மற்றும் ஹூண்டாய்
வென்யூ காரையும் காணவில்லை. இதுகுறித்து, சம்பத்குமார் அளித்த
புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.அதில்,
சம்பத்குமார் வீட்டில் இருந்து கார், பணம், தங்க மோதிரம் ஆகியவற்றை
திருடியது சிவகங்கை மாவட்டம், பருத்தியூரை சேர்ந்த அண்ணா, 48, என
தெரியவந்தது. இதையடுத்து, வேலாயுதம்பாளையம் போலீசார், அண்ணாவை
கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உதவித்தொகையை உயர்த்த கோரிக்கை
-
கோவையிலிருந்து பெங்களூருவுக்கு ஏர் இந்தியா விமானங்கள் அதிகரிப்பு
-
ரூ.11 லட்சம் அபராதம்
-
குப்பை கிடங்கால் துர்நாற்றம் கிராம சபையில் எதிர்ப்பு
-
பாறை சரிந்து மீண்டும் மண்சரிவு மலை ரயில் சேவை தாமதமாகும்
-
கோவையில் வி.பி.ஜே., ஷோரூம் திறப்பு: தங்கம், வைர நகைகளுக்கு தள்ளுபடி அறிவிப்பு
Advertisement
Advertisement