முருங்கை விவசாயிகளுக்கு அட்மா திட்டத்தில் பயிற்சி

அரவக்குறிச்சி,:கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் முருங்கை குழுவில் உள்ள விவசாயிகள் மற்றும் இதர விவசாயிகளுக்கான பயிற்சி முகாம், அரவக்குறிச்சி அருகே உள்ள சேந்தமங்கலம் மேல்பக்கத்தில் நடந்தது

அரவக்குறிச்சி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் கிருத்திகா தலைமை வகித்தார். கரூர் மாவட்ட வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் கோமதி முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், அரவக்குறிச்சி பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு காய்கறி பயிர்களில் உற்பத்தி திறனை மேம்படுத்துதல், முருங்கையில் உற்பத்தி திறனை மேம்படுத்துதல் தொடர்பான பயிற்சியளிக்கப்பட்டது. 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.

Advertisement