கிருஷ்ணகிரியில் தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்

ஓசூர்:கிருஷ்ணகிரி தி.மு.க., மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கை:

சட்டம் ஒழுங்கு சீர்கேடு, பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து, ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மாவட்ட தி.மு.க., மகளிரணி சார்பில், த.வெ.க., அரசை கண்டித்து, இன்று (அக்., 31) காலை, 10:00 மணிக்கு, கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அண்ணாதுரை சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதில், தலைமையால் அறிவிக்கப்பட்டுள்ள சுஜாதா, ஸ்ரீலேகா ஆகியோர் கண்டன உரையாற்ற உள்ளனர். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தை சேர்ந்த மகளிர் அணியினர், மகளிர் தொண்டரணியை சேர்ந்த மாவட்ட, மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வார்டு பகுதியை சேர்ந்த மகளிர் பங்கேற்க வேண்டும்.
அதேபோல், கட்சியின் மாவட்ட, மாநில நிர்வாகிகள், இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, பகுதி, பேரூர், வட்ட மற்றும் கிளை செயலாளர்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement