பெண்கள் அரசு பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு
ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி
மாவட்டம், ஊத்தங்கரை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், ஊத்தங்கரை வட்ட
சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், போக்சோ சட்டம் மற்றும் சைபர் க்ரைம்
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் தீபாராணி
தலைமை வகித்தார். ஊத்தங்கரை சார்பு நீதிமன்ற நீதிபதி திருஞானசம்பந்தம்
மற்றும் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுந்தரமூர்த்தி ஆகியோர், போக்சோ
சட்டம் பற்றிய பல்வேறு தகவல்களை மாணவியருக்கு எடுத்துரைத்தனர். ஊத்தங்கரை
இன்ஸ்பெக்டர் தென்னரசன், அரசு வழக்கறிஞர் சித்திக், வழக்கறிஞர்கள் சங்க
துணைத் தலைவர் பிரபாவதி, வழக்கறிஞர்கள் வஜிரவேல், திலகா ஆகியோர் போக்சோ
சட்டம் உருவான விதம், அதில் உள்ள பாதுகாப்பு, தொடர்பு கொள்ள வேண்டிய
அதிகாரிகள், தொலைபேசி எண், சைபர் க்ரைம் ஆகியவற்றை பற்றி எடுத்துரைத்தனர்.
இந்நிகழ்ச்சியில்,
மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழுவை சார்ந்த பிரியதர்ஷினி, ஆசிரியர்கள்,
மாணவியர் கலந்து கொண்டனர். முன்னதாக முதுகலை ஆசிரியர் தேவி வரவேற்றார்.
வட்ட சட்டப் பணிகள் ஆணை குழு சிவசெல்வம் நன்றி கூறினார்.
மேலும்
-
மகேஷை ஐந்து நாள் விசாரிக்க அனுமதி கோரி சிறப்பு கோர்ட்டில் மனு; நவம்பர் 2ல் உத்தரவு
-
எல்பிஜி, டேங்கர் சங்க தலைவர் மீது குற்றச்சாட்டு: உறுப்பினர்கள் முற்றுகை
-
அரசுப்பணி செய்யவிடாமல் தடுப்பு த.வெ.க., ஒன்றிய செயலர் மனு
-
கூட்டுறவுத்துறை ஊழியர்கள் விடுப்பு எடுத்து போராட்டம்
-
617 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
-
சிறையில் பாதுகாப்பு குளறுபடிக்கு என்ன காரணம்? வெளியானது புதிய தகவல்