ரூ.1,000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனை கிருஷ்ணகிரி டாஸ்மாக்கில் நாளை முதல் அமல்

கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் நாளை (நவ.,1-ம் தேதி) முதல் ஒரு விற்பனையில், 1,000- ரூபாய்க்கு மேல் வாங்கப்படும் மதுபானங்கள், மின்னணு பரிவர்த்தனை முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும்.

இதுகுறித்து, கிருஷ்ணகிரி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் செங்கிஸ்கான் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மதுபானங்களை வாங்கும் போது புகார் வருகிறது. குறிப்பாக, ரொக்கம் பணம் கையாளுவது, நுகர்வோருக்கு ஏற்படும் இடையூறுகளை தவிர்க்க நாளை முதல் ஒரு விற்பனையில், 1,000- ரூபாய்க்கு மேல் மற்றும் வரும் ஜன.,1-முதல், 500- ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படும் மதுபானங்களுக்கு மின்னணு பரிவர்த்தனை முறையில் மட்டுமே பணம் செலுத்த வேண்டும். நுகர்வோர் எளிமையாக இணையவழி மதுபான முன்பதிவு முறையின் மூலம் தொகையை செலுத்தி, மது பானங்களை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement