வெவ்வேறு சம்பவத்தில் இருவர் மாயம்

தேன்கனிக்கோட்டை:கர்நாடகா மாநிலம், பெங்களூரு கே.ஜி., ஹள்ளி குஷால் நகரை சேர்ந்தவர் முகம்மது இம்ரான், 33. பெங்களூருவில் அலுமினிய கடை நடத்தி வருகிறார்.

கடந்த, 1ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்ற முகம்மது இம்ரான் மாயமானார். அவரது மனைவி அர்பியா, 25, பெங்களூரு டி.ஜே.,ஹள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் மாயமான முகம்மது இம்ரானை கண்டுபிடித்து குடும்பத்துடன் ஒப்படைத்தனர்.இந்நிலையில் கடந்த, 8ம் தேதி, தன் குடும்பத்துடன் தேன்கனிக்கோட்டை ஆசாத் தெருவில் வசிக்கும் தன் தாய் வீட்டிற்கு அர்பியா வந்தார். அங்கிருந்து கடந்த, 28ம் தேதி வெளியே சென்ற முகம்மது இம்ரான் திரும்பி வரவில்லை. அவரது மனைவி தேன்கனிக்கோட்டை போலீசில் கொடுத்த புகாரில், பெங்களூரு கோவிந்தாபுரத்தை சேர்ந்த சல்மான் மனைவி குஷானாபானு, 28, என்பவருடன், முகம்மது இம்ரான் சென்றிருக்கலாம் என தெரிவித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே மாரச்சந்திரத்தை சேர்ந்தவர் ருத்ரேஷ்குமார், 32, விவசாயி; கடந்த, 7ம் தேதி காலை, 7:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மனைவி ேஷாபா, 31, ஹட்கோ போலீசில் நேற்று முன்தினம் புகார் செய்தார். போலீசார் ருத்ரேஷ்குமாரை தேடி வருகின்றனர்.

Advertisement