ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர்: சொல்கிறார் ஸ்டாலின்
சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகம் எங்கும் திமுக மகளிர் அணியினர் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில், கட்சி சார்பற்ற மகளிரும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
தங்கள் வீடுகளின் இபி பில்-ஐயும் மளிகை பில்-ஐயும் பார்த்து, இந்த ஆட்சி மீது பெண்கள் பெரும் கோபத்தில் இருக்கின்றனர். விலைவாசி ஏற்றத்தால் ஏழை மக்கள் விக்கித்து நிற்கிறார்கள். போதாக் குறைக்கு, பெண்களுக்கு எதிரான குற்றங்களும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன.
தங்கள் வீட்டுப் பிள்ளைகளை வீட்டுக்கு வெளியே விளையாட விடவே அச்சப்படும் அளவுக்குச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுப் போயுள்ளதையும் அவர்கள் செய்திகளில் தினம்தினம் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். விமர்சனம் செய்வோரை வேட்டையாடுவதிலும், இடைத்தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் ஷோ காட்டுவதிலும் முதலமைச்சருக்கு இருக்கும் கவனம் ஆட்சி நிர்வாகத்திலும் இருக்க வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியைத் தமிழக பெண்கள் அடித்துவிட்டனர். அவர்களின் குரலுக்கு செவிசாய்ப்பது அரசின் கடமை. இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
@block_Y@
ஒரு வரி விமர்சனம்!
தமிழகத்தில் ஒரே நாளில் கோவையில் கைதி ஒருவரும், சென்னையில் கைதி ஒருவரும் என இருவர் தப்பிய ஓடிய சம்பவம் அரங்கேறி இருக்கிறது. சென்னை கொளத்தூரில் போலீஸார் பாதுகாப்பில் இருந்த கைதி தப்பியோட்டம் செய்தி பகிர்ந்து, ''மீண்டும் மீண்டுமா??'' என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.block_Y
இனி வரும் காலங்களில் லஞ்சம் வாங்க மாட்டோம் என்ற குறைந்த பட்ச உறுதிமொழியாவது திமுக கொடுக்க வேண்டும்
எந்த பெண்ணும் அப்படி நினைக்கல சும்மா எதாவது உளறிக்கிட்டு இருக்காத நீங்க சும்மா ஒரு ஆறு மாசம் இருந்த போதும் உங்க மேல கொஞ்சமாவது மரியாதை வரும் இல்லனா உங்க கட்சி நீயும் உன் பையன் அழித்து விடுவீர்கள்
கொளத்தூர் முன்னாள் எம்எல்ஏ தான் கண்ணாடி முன் நின்று கொண்டு பேசுவதை மறந்துவிட்டார்
உங்கள் ஆட்சியில் நடக்காத கந்தர்வ கோலங்களா?
என்னவோ இவராட்சி காலத்தில் எல்லாரும் சந்தோஷமாக இருந்ததாக கூத்து. அனைவரையும் ஏமாற்றி ஊரை கொள்ளை அடித்தது அனைவருக்கும் தெரியும்.
மாநில பேருந்துகளில் இலவச பயணம். பெண்கள் ஒரே குழியாக இருக்கின்றனர்.
திருட்டு கழக கும்பலின் யோக்கியதையை ஓப்வ்வொரு நாளும் சாந்தி சிரிக்கிறது. இப்போர் சொல்லு பாக்கலாம் ஒன்றிய அரசு அரசு குன்றிய அரசுனு வாயில் வர மாடடீடீன்னு வர மாட்டான் என்கிறதெ.
பழய நின்னைய்யப்புடா பேரா.
திருவிளையாடல் படத்தில் தருமி புலம்பும் கட்சி - நா என்ன பண்ணுவேன் நா என்ன பண்ணுவேன்"
உங்கள் வீட்டுப் பெண்களாமேலும்
-
காசியாபாத்தில் அதிரடி நடவடிக்கை; தமிழகத்தில் இப்படி சட்ட விரோத கட்டடங்கள் இடிக்கப்படுமா?
-
வணிக பயன்பாட்டிற்கான காஸ் சிலிண்டர் விலை 11 ரூபாய் அதிகரிப்பு
-
ஜெர்மனியில் இளைஞர்களின் போராட்டத்தில் வன்முறை; போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
-
ஈரானுக்கு எதிரான போர்; இஸ்ரேல் பிரதமருடன் டிரம்ப் போனில் பேச்சு
-
மத்திய அமைச்சரவை மாற்றம் எப்போது: ஜனாதிபதியுடன் அமித் ஷா சந்திப்பில் நடந்தது என்ன?
-
போலீஸ் மைக்கில் போதை வாலிபர் அலப்பறை; காரைக்குடியில் நள்ளிரவில் பரபரப்பு