போலீஸ் மைக்கில் போதை வாலிபர் அலப்பறை; காரைக்குடியில் நள்ளிரவில் பரபரப்பு

1

-நமது நிருபர்-

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, ஈவெரா சிலை சிக்னல் பகுதியில், நள்ளிரவில் போக்குவரத்து போலீஸ் ஒலிபெருக்கியைப் பயன்படுத்தி மதுபோதையில் வாலிபர் ஒருவர் அதிக சத்தத்துடன் பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக காவல்துறை கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கி மூலம், மது போதையில் வந்த அந்த நபர், தனது மனைவியால் அனுபவிக்கும் பிரச்னைகள் குறித்து கலெக்டர், எஸ்.பி., ஏ.சி. ஆகியோருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனக் கூறி கூச்சலிட்டார்.

அப்போது அருகில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் அவரைத் தடுத்து வெளியேற்றினார். நள்ளிரவு நேரத்தில் முக்கிய சாலைப் பகுதியில் போலீசார் இல்லாததைப் பயன்படுத்தி, போக்குவரத்தை சீரமைக்க பயன்படுத்தும் ஒலிபெருக்கியை வாலிபர் தவறாகப் பயன்படுத்திய சம்பவம் அரங்கேறி உள்ளது.

Advertisement