மத்திய அமைச்சரவை மாற்றம் எப்போது: ஜனாதிபதியுடன் அமித் ஷா சந்திப்பில் நடந்தது என்ன?

8

-நமது சிறப்பு நிருபர்-

டில்லியில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, ஜனாதிபதி திரவுபதி முர்முவை சமீபத்தில் சந்தித்து, 30 நிமி டங்கள் பேசினார். கவர்னர்கள் மாற்றமா அல்லது மத்திய அமைச்சரவை விரிவாக்கமா... எது தொடர்பாக இந்த சந்திப்பு நடந்தது என, சக அமைச்சர் களுக்கும் சரி, அதிகாரிகளுக்கும் சரி, யாருக்குமே தெரியவும் இல்லை; புரியவும் இல்லை.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் சில சட்ட சிக்கல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை, அது தொடர்பாக ஜனாதிபதி முர்முவை அமித் ஷா சந்தித்தாரா என, அதிகாரிகள் மத்தியில் பேச்சு. ஆனால், அதுவும் இல்லையாம். ஜனாதிபதி முர்முவும், அமித் ஷாவும் என்ன பேசினர், எதை பற்றி விவாதித்தனர் என்பது அவர் களுக்கு மட்டுமே தெரியும்.

மத்திய அரசின் மூத்த அதிகாரிகளுக்கும் கூட இது சம்பந்தமாக எதுவுமே தெரியவில்லை. ஜனாதிபதியை பிரதமர் அல்லது மற்ற அமைச்சர்கள் சந்தித்தால், அது குறித்து அரசு தரப்பிலிருந்து தகவல் தெரிவிக்கப்படும். ஆனால், அமித்ஷா சந்திப்பு குறித்து எந்த தகவலும் இல்லாததால், அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர். சில நாட்க ளுக்கு முன், பிரதமர் மோடியும், ஜனாதிபதி முர்முவை சந்தித்து பேசினார். அது பற்றியும் எந்த தகவலும் இல்லை.

Advertisement