பெருமாள் குளம் நீர்வரத்து வாய்க்கால் தூர்வாரப்படுமா
ஒட்டன்சத்திரம்: விருப்பாச்சி பெருமாள் குளம் நீர்வரத்து வாய்க்காலை துார்வார வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் சங்கத்தினர் கூறியுள்ளதாவது:
ஒட்டன்சத்திரம் பரப்பலாறு அணையில் இருந்து விருப்பாச்சி பெருமாள் குளம் வரை உள்ள நீர்வரத்து வாய்க்காலில் செடி கொடிகள் வளர்ந்து புதர்மண்டி உள்ளது. இக்குளம் நிரம்பி வெளியேறும் உபரிநீரானது கரட்டுப்பட்டி ஓட்டக்குளம், பாப்பான்குளம், முத்துசமுத்திரம் குளம், காவேரியம்மாபட்டி பெரியகுளம் ஆகிய நீர்நிலைகளுக்கு செல்கிறது. இந்த உபரிநீர் செல்லும் வாய்க்கால்களிலும் புதர்மண்டி உள்ளது.
பொதுப்பணித்துறையினர் இந்த வாய்க்கால்களை துார்வாரி நீர்நிலைகளுக்கு தடையின்றி தண்ணீர் சென்றடைய நடவடிக்கை வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வாக வாய்க்காலின் இருபுறங்களிலும் கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மேலும்
-
புயல் கரையை கடந்தது; ஆந்திராவில் நவம்பர் 5 வரை கனமழை தொடரும்: வானிலை மையம் எச்சரிக்கை
-
உக்ரைனில் ரஷ்யா குண்டுவீச்சு தாக்குதல்; 26 பேர் உயிரிழப்பு
-
அசாமில் மோசடி கும்பல் கைது; பாகிஸ்தான் உளவுத்துறை அமைப்புடன் தொடர்பா என விசாரணை
-
கலிபோர்னியா கடற்கரையில் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலி
-
பஞ்சு விலை குறைந்தால் நுால் விலை குறையும்; இறக்குமதி வரி சலுகையை நீட்டிக்க வலியுறுத்தல்
-
இன்று பெருந்துறைக்கு பயணம்; ரூ.1,100 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் விஜய்