சூழலில் சுற்றுலா தலத்தை தேடும் சுற்றுலா பயணிகள்

கீழக்கரை: ஏர்வாடி அருகே பிச்சை மூப்பன் வலசையில் சூழலியல் சுற்றுலாத்தளம் இயங்கி வருகிறது. கடந்த 2020 முதல் மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பக அறக்கட்டளை சார்பில் இயங்கக்கூடிய மணல் திட்டு சூழலியல் சுற்றுலா தளத்திற்கு உரிய வழிகாட்டு பலகை இல்லாததால் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் குழப்பம் அடைகின்றனர். சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது:

ஏர்வாடி பிரதான சாலையில் வழிகாட்டி போர்டு சேதமடைந்து பொழிவிழந்துள்ளது.

சூழலியல் சுற்றுலா தளம் குறித்த விளம்பர பதாகைகள் முறையாக வைக்கப்படவில்லை. இதனால் பெரும்பாலானோர் வழி தெரியாமல் தவிக்கின்றனர். எனவே பிச்சை மூப்பன் வலசை செல்லக்கூடிய சுற்றுலா தளம் குறித்த விளம்பர போர்டுகளை வைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதனை ஒட்டி ஆக்கிரமித்துள்ள விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என்றனர்.

Advertisement