வேளாண்மை விழிப்புணர்வு

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பிரதமர் கிசான் சம்மான் நிதித் திட்டம், விளை நிலங்களைக் காப்போம் இயக்கம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் குஜராத் மாநிலம் பான்ஸ்கந்தாவில் நடந்த தேசிய அளவிலான நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. ராமநாதபுரம் வேளாண் இணை இயக்குநர் வாசுகி தலைமை வகித்தார்.

மத்திய அரசின் திட்டத்தின் நோக்கங்கள், பயன்களை விளக்கினார். மாநில திட்டங்களுக்கான துணை இயக்குநர் அமர்லால், தொழில் நுட்ப வல்லுநர் விஜயகுமார் வேளாண்மை சார்ந்த திட்டங்களை பெறுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பயிர்களில் ஏற்படும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதல்களை கண்டறிதல், கட்டுப்படுத்துதல் குறித்து தொழில்நுட்ப வல்லுநர் கண்ணையன் பேசினார்.

நெல் சாகுபடியில் களைகளைக் கட்டுப்படுத்த விவசாயிகளுக்குக் களைக்கொல்லிகள் வழங்கப்பட்டன. –––

Advertisement