தேசிய திருக்குறள் மாநாடு

காரைக்குடி: அமராவதிப்புதுார் ராஜராஜன் கல்வியியல் கல்லுாரியில் தேசிய திருக்குறள் மாநாடு உலக சாதனை நிகழ்ச்சி, நுால் வெளியீட்டு விழா நடந்தது.

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி பேசினார்.

அவர் கூறியதாவது: ஏ.ஐ., தொழில்நுட்பம் கல்வி மருத்துவம் உட்பட பல்வேறு துறைகளிலும் பயன்படுகிறது.

மனிதன் அதை சரியாக பயன்படுத்த வேண்டும்.

அணுசக்தி நிறைய மின்சாரத்தை உருவாக்க உதவும் .அபாயத்திற்கும் பயன்படும். திருவள்ளுவர் சொன்னது போல் எதை எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது தான் அவசியம். இந்தியாவில் அதிக அறிவியலாளர்கள் உருவாகியுள்ளனர். கல்வி, சுகாதாரம் விண்வெளித் துறையில் இந்தியா முன்னேறி வருகிறது.

இதுவரை, பள்ளி, கல்லூரிகளில் படித்ததை வைத்து தான் வாழ்நாள் முழுவதும் பணி செய்து வந்தோம்.

ஆனால் இன்று, எந்தத் துறையாக இருந்தாலும் மாறிக்கொண்டும் உயர்ந்து கொண்டும் வருகிறது.

வாழ்நாள் முழுவதும் கற்று, திறனை வளர்க்க வேண்டியுள்ளது.

விண்வெளித் துறை, தனியாரும் விண்வெளி துறைக்கு வரலாம் என்ற வாய்ப்பை வழங்கி உள்ளது.

விண்வெளி ஆராய்ச்சியில் முன்னதாகவே ஏ.ஐ., பயன்படுத்தப்பட்டுள்ளது. பல வழிகளில் உதவியுள்ளது. செயற்கைக்கோளிலிருந்து தகவல்கள் வர அரை மணி நேரம் வரை தாமதம் ஆகும். தகவல் உடனடியாக வரவும் தானியங்கி முறையில் பயன்படுத்தவும் ஏ.ஐ., தேர்வு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் 60 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு செயற்கைக்கோள் அனுப்பினோமோ அதைவிட அதிகம் அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

Advertisement