சம்பா நெல் நடவு வயல்கள் ஆய்வு
வானுார்: சம்பா நெல் நடவு வயல்களை வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் ஆய்வு செய்தார்.
வானுார் வட்டாரத்தில் சம்பா பருவத்திற்கு நெல் 3,500 எக்டர் சாகுபடி இலக்காக பெறப்பட்டு, 24 ஆயிரம் மெட்ரிக் டன்கள் அரிசி உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, விவசாயிகளுக்கு தேவையான நெல் ரகங்களான சி.ஆர்.1009 சப்-1, பி.பீ.டி 5204 , மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, ஆடுதுறை–39; போன்ற ரகங்கள் வேளாண்மை விரிவாக்க மையம் மூலம் வினியோகம் செய்யப்பட்டு தைலாபுரம், கொஞ்சுமங்கலம், எடச்சேரி, உப்பு வேலுார், புது குப்பம், கொமடிபட்டு, தலகாணி குப்பம் கிராமங்களில், 900 எக்டர் பரப்பளவில் விவசாயிகள் நெல் நடவு மற்றும் நேரடி விதைப்பு செய்துள்ளனர். இந்த சம்பா நெல் நடவு வயல்களை வானுார் வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ் ஆய்வு செய்தார். அப்போது, துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண்மை அலுவலர்கள் சரவணன், ராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும்
-
மயான எரியூட்டும் கட்டடம் சேதம்: சீரமைக்க கோரிக்கை
-
மாவட்டத்தில் 300 விலையில்லா பசு மாடுகள் வழங்க ஏற்பாடு
-
கூடலுார் வழியாக ரேஷன் அரிசி கடத்தல் அதிகரிப்பு! குற்ற புலனாய்வு அலுவலகம் திறக்கப்படுமா?
-
வாடகை செலுத்தாமல் ‘ டிமிக்கி’ 19 கடைக்கு அதிரடியாக‘ சீல்’
-
இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம்: இந்திய அணி 191 ரன்
-
திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட்; 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு