‘இங்கு குடிக்க வேண்டாம்; ப்ளீஸ்!’ பஸ் பணிமனைகளில் விழிப்புணர்வு

சென்னை: மாநகர போக்குவரத்து பணிமனைகளில், காலி மதுபாட்டில்கள் குவிந்ததையடுத்து, ‘இங்கு மது குடிக்க வேண்டாம்; பிளீஸ்’ என, போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில், 3,900 மேற்பட்ட மாநகர பேருந்துகள் உள்ளன. இவை, 33 பணிமனைகளில் பராமரித்து, இயக்கப்படுகின்றன.

பணிகளை முடித்து ஓய்வு எடுத்து வீடுகளுக்கு திரும்பும் நேரத்தில், சிலர் மது குடித்து விட்டு செல்கின்றனர். இதனால், போக்குவரத்து பணிமனைகளில், மது பாட்டில்கள் குவிந்தன.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், பணிமனைகளில் மதுபாட்டில்களை அப்புறப்படுத்தினர். மேலும், ‘இங்கு மது குடிக்க கூடாது’ என, போஸ்டரை ஒட்டியுள்ளனர்.

Advertisement