பாறை சரிந்து மீண்டும் மண்சரிவு மலை ரயில் சேவை தாமதமாகும்

குன்னுார்: மலை ரயில் பாதையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவை துவங்குவதில் தாமதம் ஏற்படுகிறது.

மேட்டுப்பாளையம் -–- குன்னுார் இடையேயான மலை ரயில் பாதையில் கடந்த 23ம் தேதி பெய்த கனமழையால், 56 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்து வந்தது. நேற்றிரவு பெய்த கன மழைக்கு ஹில் குரோவ் ஸ்டேஷன் பகுதியில் மீண்டும் பாறைகள் சரிந்து மண்சரிவு ஏற்பட்டதால் சீரமைப்பு பணி பாதிக்கப்பட்டது.

வரும், 4ம் தேதி வரை மேட்டுப்பாளையம் – குன்னுார் இடையே மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மலை ரயில் பாதையில் அடுத்தடுத்த பாதிப்புகளால், ரயில் சேவை மீண்டும் துவங்குவதில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. குன்னுார் –- ஊட்டி இடையே வழக்கம் போல், இயக்கப்பட்டு வரும் மலை ரயிலில் சுற்றுலா பயணியரின் வருகை குறைவாக காணப்படுகிறது.

Advertisement