ரூ.11 லட்சம் அபராதம்
கோவை: மாநகராட்சி நிர்வாகத்தின் அனுமதியின்றி பொது இடங்களில் போஸ்டர், பேனர் வைக்க தடை உள்ளது. தடையை மீறி போஸ்டர், பேனர் வைக்கப்படுகிறது. போக்குவரத்துக்கு தொந்தரவாகிறது. சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. த.வெ.க., ஆட்சிக்கு வந்த பிறகு போஸ்டர், பேனர் கலாசாரம் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
ஆங்காங்கே போஸ்டர்களை கிழித்து, பேனர்களை அகற்றி அபராதம் விதிக்கப்படுகிறது.
ஆனாலும் கலாசாரம் ஓய்ந்தபாடில்லை. கடந்த ஜூன் முதல் அக். வரை, அனுமதியின்றி போஸ்டர், பேனர் வைத்ததற்கு ரூ.11,68,300 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி நிர்வாகம் கூறியுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement