குலசையில் மார்ச்சில் முதல் ராக்கெட் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி
சென்னை: ''துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினத்தில், புதிதாக அமைக்கப்படும் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து, முதல் ராக்கெட், வரும் மார்ச் அல்லது ஏப்ரலில் விண்ணில் ஏவப்படும்,'' என, இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கடந்த, 30ம் தேதி, 'ஜி.எஸ்.எல்.வி., எப் --18' ராக்கெட் உதவியுடன் ஏவப்பட்ட, வழிகாட்டி செயற்கைக்கோள், முதலில் நீள்வட்டப் பாதையில், வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. 38 ஆயிரம் கி.மீ., உயரம் கொண்ட சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளை, அதில் பொருத்தப்பட்டுள்ள சொந்த உந்துவிசை இயந்திரத்தின் உதவியுடன், மேலும் 5,500 கி.மீ., தொலைவுக்கு உயர்த்தி உள்ளோம். அதன் இலக்கு பாதைக்கு மேலும் உயர்த்த, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் வழிகாட்டி செயற்கைக்கோள் திட்டம், மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.
இந்தியாவிடம், 56 செயற்கை கோள்கள் உள்ளன. நாட்டின் அனைத்து தேவைகளையும், பூர்த்தி செய்வதற்கும், பல்வேறு தகவல்களை கண்டறிந்து கண்காணிப்பதற்கும், ஆயிரக்கணக்கான செயற்கை கோள்கள் தேவைப்படுகின்றன. இந்தியாவின் மனித விண்வெளி பயணத் திட்டமான ககன்யான் திட்டம், சிறப்பான முறையில் முன்னேறி வருகிறது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதற்கு முன், ஆளில்லா விண்கலங்களை அனுப்பி, சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
'சந்திரயான் - -4' திட்டத்தை, 2028ம் ஆண்டு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. நிலவு தொடர்பான ஆராய்ச்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்ல பணிகள் நடந்து வருகின்றன. துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில், புதிய ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த ஏவுதளத்திலிருந்து அடுத்த ஆண்டு, மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில், முதல் ராக்கெட் விண்ணில் ஏவப்படும்.
இவ்வாறு நாராயணன் கூறினார்.
புதிய மைல்கல். வாழ்த்துகள்மேலும்
-
இண்டி கூட்டணி பொதுக்கூட்டத்தால் ரூ.12,000 கோடி வர்த்தகம் பாதிப்பு?
-
இந்தியாவில் புல்லட் ரயில் திட்டங்கள் வேகம்: புதிய வழித்தடத்துக்கு பிரதமர் மோடி ஒப்புதல்
-
36 சொகுசு வீடுகள் வாங்கிய ஐஏஎஸ் - ஐபிஎஸ் தம்பதி; விசாரணைக்கு ராஜஸ்தான் அரசு உத்தரவு
-
சித்தேரியில் கலக்கும் தொழிற்சாலை கழக/வு நீரால் ...ஆபத்து! கிராம சபையில் மக்கள் கேள்வியால் திணறிய அதிகாரிகள்
-
பால் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்த அரசுக்கு ஆவின் நிர்வாகம் பரிந்துரை
-
பாரத் இன்டர்நேஷனல் சர்வதேச பள்ளி மாணவி மாநில அளவிலான போட்டியில் வென்று சாதனை