இந்தியாவில் புல்லட் ரயில் திட்டங்கள் வேகம்: புதிய வழித்தடத்துக்கு பிரதமர் மோடி ஒப்புதல்

6

புதுடில்லி: மஹாராஷ்டிராவின் மும்பை - குஜராத்தின் ஆமதாபாத் இடையேயான முதல் புல்லட் ரயில் வழித்தடப் பணிகள், 62 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில், டில்லி -- அசாமின் குவஹாத்தி இடையே அமையவுள்ள வடக்கு புல்லட் ரயில் வழித்தடத்துக்கு பிரதமர் மோடி ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், மஹாராஷ்டிராவின் புனே -- கர்நாடகாவின் பெங்களூரு இடையே புல்லட் ரயில் வழித்தடம் அமைப்பதற்கான பணிகளும் நடக்கின்றன.

நாட்டில், அதிவேக புல்லட் ரயில் சேவையை அறிமுகப்படுத்த, என்.எச்.எஸ்.ஆர்.சி.எல்., எனப்படும், தேசிய அதிவேக ரயில் நிறுவனம் அமைக்கப்பட்டது. இதன் மூலம், நாட்டின் முதல் புல்லட் ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் மும்பை, ஆமதாபாதை இணைக்கும் வகையில், 508 கி.மீ., துாரத்துக்கு அமைக்கப்படுகிறது. ஜப்பான் நாட்டின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், புல்லட் ரயில்கள் மணிக்கு அதிகபட்சம், 320 கி.மீ., வேகத்தில் இயக்கப்படும்.

இதற்கான கட்டுமானப் பணிகள் பல்வேறு கட்டங்களாக நடக்கின்றன. தற்போது வரை இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள், 62.16 சதவீதம் நிறைவடைந்துள்ளன. 2029ல், நாட்டின் முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு



இந்நிலையில், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை இணைக்கும் வகையில் புதிய புல்லட் ரயில் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. டில்லியில் இருந்து அசாமின் குவஹாத்தி வரை, மேற்கு வங்கத்தின் சிலிகுரி வழியாக இந்த வழித்தடம் அமைய உள்ளது. வடகிழக்கு மாநிலங்களை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் முக்கியமான புவியியல் பகுதியாக சிலிகுரி விளங்குகிறது. இதனால், இந்த வழித்தடம் வடகிழக்கு மாநிலங்களுக்கான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

டில்லி - குவஹாத்தி இடையிலான இந்த புல்லட் ரயில் வழித்தடம், உத்தர பிரதேசத்தின் ஆக்ரா, லக்னோ, கான்பூர், வாரணாசி உள்ளிட்ட முக்கிய நகரங்கள் வழியாகவும், பீஹாரின் முக்கிய நகரங்கள் வழியாகவும் செல்லும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது.

இதன் மூலம், வட மாநிலங்கள் இடையிலான பயண நேரம் கணிசமாக குறையும். டில்லி - ஆக்ரா இடையிலான பயணம், 59 நிமிடங்களிலும், டில்லி - கான்பூர் பயணம், 1 மணி நேரம் 45 நிமிடங்களிலும், டில்லி - லக்னோ பயணம், 2 மணி நேரம், 12 நிமிடங்களிலும் மேற்கொள்ள முடியும்.

உறுதி



சாலை அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் பயணித்தால் இந்த நேரம் மும்மடங்கு அதிகம். இந்த வடக்கு புல்லட் ரயில் வழித்தடத்துக்கு பிரதமர் மோடி சமீபத்தில் ஒப்புதல் அளித்தார். இதை பா.ஜ.,வைச் சேர்ந்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று உறுதி செய்தார்.

கர்நாடகாவின் பெங்களூரில், பெங்களூரு - மும்பை இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை தொடங்கி வைத்து, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:
Latest Tamil News
பிரதமர் மோடி தலைமையில் நாட்டின் புல்லட் ரயில் வழித்தடங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன. ஏற்கனவே, 4,000 கி.மீ., துாரத்துக்கான புல்லட் ரயில் வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் மேலும், 3,000 கி.மீ., துாரத்துக்கான வழித்தடங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

தெற்கு புல்லட் ரயில் வழித்தடம் புனே, ஹைதராபாத், அமராவதி, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், தென் மாநிலங்களின் முக்கிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மையங்கள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக இணையும்.

இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வரும்போது, பெங்களூரு -- சென்னை இடையிலான பயண நேரம், 1 மணி நேரம் 13 நிமிடங்களாகவும், பெங்களூரு - ஹைதராபாத் இடையிலான பயண நேரம், 2 மணி நேரம் 10 நிமிடங்களாகவும் குறையும். இதில், பெங்களூரு -- புனே வழித்தடம் பெங்களூரில் இருந்து ஹுப்பள்ளி வழியாக புனே வரை கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளை இணைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

@quote@

முக்கிய மைல்கல்!



டில்லி -- குவஹாத்தி இடையே எட்டு மணி நேரத்திற்குள் புல்லட் ரயிலில் பயணிக்க முடியும் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வடக்கு புல்லட் ரயில் வழித்தடம் குவஹாத்தி வரை நீட்டிக்கப்பட்டிருப்பது வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சியில் முக்கிய மைல்கல். முதலில், சிலிகுரியுடன் முடிவடைய இருந்த இந்த வழித்தடத்தை, என் கோரிக்கையை ஏற்று வடகிழக்கு மாநிலங்கள் வரை நீட்டிக்க ஒப்புதல் அளித்த பிரதமர் மோடி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு நன்றி.

- ஹிமந்த பிஸ்வ சர்மா,




அசாம் முதல்வர், பா.ஜ.,quote

@block_G@

'சென்னை - பெங்களூரு 73 நிமிடமே பயண நேரம்'



​கர்நாடகாவின் பெங்களூரில் நேற்று, பெங்களூரு - மும்பை இடையே வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை தொடங்கி வைத்து, அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசியதாவது:

​பிரதமர் மோடி தலைமையில் நாட்டின் புல்லட் ரயில் வழித்தடங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன. ஏற்கனவே, 4,000 கி.மீ., தூரத்துக்கான புல்லட் ரயில் வழித்தடங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் மேலும், 3,000 கி.மீ., தூரத்துக்கான வழித்தடங்கள் அறிவிக்கப்பட உள்ளன.

​தெற்கு புல்லட் ரயில் வழித்தடம் புனே, ஹைதராபாத், அமராவதி, சென்னை, பெங்களூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், தென் மாநிலங்களின் முக்கிய பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மையங்கள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக இணையும்.

​இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வரும்போது, பெங்களூரு - சென்னை இடையிலான பயண நேரம், 1 மணி நேரம் 13 நிமிடங்களாகவும், பெங்களூரு - ஹைதராபாத் இடையிலான பயண நேரம், 2 மணி நேரம் 10 நிமிடங்களாகவும் குறையும். ​இதில், பெங்களூரு - புனே வழித்தடம் பெங்களூரில் இருந்து ஹுப்பள்ளி வழியாக புனே வரை கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளை இணைக்கும். ​இவ்வாறு அவர் பேசினார்.block_G

Advertisement