விபத்தில் ஒரே நாளில் மூவர் பலி
திண்டுக்கல்: திண்டுக்கல் வத்தலக்குண்டு பழநி பைபாஸ் ரோடு கொட்டபட்டி அருகே மதுரையில் இருந்து பெங்களூரு சென்ற கார், ரோட்டை கடக்க முயன்ற வடமாநில வாலிபர்கள் இருவர் மீது மோதியது. படுகாயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். போலீஸ் விசாரணையில், அவர்கள் அஸ்காது பிகாரா 25, மனோஜ் பிகிரி 25, என தெரிந்தது. இருவரின் உடல்களையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
* என்.பஞ்சம்பட்டி செபஸ்தியான் மகன் தமிழ்ச்செல்வன் 21, கல்லுாரி மாணவர். இவர் தனது நண்பர் கிளமெண்ட் லியோ 21, உடன் டூவீலரில் வத்தலக்குண்டு சாலை சந்திப்பு நோக்கி புறப்பட்டார். திண்டுக்கல் -பழநி ரோட்டில் கொட்டபட்டி அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி டூவீலர் மீது மோதியது. பலத்த காயமடைந்த இருவரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழ்ச்செல்வன் இறந்தார். சுரக்காய்பட்டி லாரி டிரைவர் வீரபாண்டியை 38, பிடித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு