ராமேஸ்வரம், செங்கோட்டைக்கு தீபாவளி சிறப்பு ரயில்கள் இயக்கம்

மதுரை: தீபாவளிக்கு சொந்த ஊர் சென்று திரும்பும் பயணிகளின் வசதிக்காக சென்னையில் இருந்து ராமேஸ்வரம், செங்கோட்டை, கேரள மாநிலம் கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை எழும்பூர் – ராமேஸ்வரம்

* நவ.5 இரவு 8:15 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06104), மறுநாள் காலை 11:00 மணிக்கு எழும்பூர் செல்கிறது. மறுமார்க்கத்தில் நவ.7 அதிகாலை 12:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06103), அன்று மதியம் 3:50 மணிக்கு ராமேஸ்வரம் செல்கிறது.

* நவ.10 அதிகாலை 12:30 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06037), அன்று மாலை 5:30 மணிக்கு ராமேஸ்வரம் செல்கிறது. மறுமார்க்கத்தில் அன்றிரவு 8:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06038), மறுநாள் காலை 11:00 மணிக்கு எழும்பூர் செல்கிறது.

மேற்கண்ட ரயில்கள் ராமநாதபுரம், மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், பேரளம், மயிலாடுதுறை, திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், தாம்பரம் வழியாக செல்கின்றன.

ராமேஸ்வரம் – தாம்பரம்

* நவ.9 மாலை 4:55 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06108), மறுநாள் காலை 10:00 மணிக்கு தாம்பரம் செல்கிறது. ராமநாதபுரம், மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால், பேரளம், மயிலாடுதுறை, திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக செல்கிறது.

கொச்சுவேலி – தாம்பரம்

* நவ.10 இரவு 8:00 மணிக்கு கொச்சுவேலியில் (திருவனந்தபுரம் வடக்கு) இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06164), மறுநாள் காலை 11:00 மணிக்கு தாம்பரம் செல்கிறது. மறுமார்க்கத்தில் நவ. 11 மதியம் 2:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06163), மறுநாள் அதிகாலை 5:00 மணிக்கு கொச்சுவேலி செல்கிறது.

திருவனந்தபுரம் சென்ட்ரல், நாகர்கோவில், திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம் வழியாக செல்கிறது.

தாம்பரம் – செங்கோட்டை

நவ.9 இரவு 11:55 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06089), மறுநாள் மதியம் 12:15 மணிக்கு செங்கோட்டை செல்கிறது. மறுமார்க்கத்தில் நவ.10 மதியம் 3:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06090), மறுநாள் அதிகாலை 3:20 மணிக்கு தாம்பரம் செல்கிறது.

தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக செல்கிறது.

இன்று முன்பதிவு: ராமேஸ்வரம் – எழும்பூர் – ராமேஸ்வரம் (06104/06103), எழும்பூர் – கன்னியாகுமரி – எழும்பூர் (06151/06152), தாம்பரம் – தென்காசி/செங்கோட்டை – தாம்பரம் (06049/06050) ஆகிய ரயில்களுக்கு இன்று (நவ.3) காலை 8:00 மணிக்கு முன்பதிவு தொடங்குகிறது. மேற்கண்ட மற்ற ரயில்களுக்கு விரைவில் முன்பதிவு தொடங்கும்.

பெங்களூரு – துாத்துக்குடி

* நவ.6 இரவு 9:45 மணிக்கு கர்நாடக மாநிலம் பெங்களூரு கன்டோன்மென்ட்டில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (06533), மறுநாள் மதியம் 12:30 மணிக்கு துாத்துக்குடி செல்கிறது. மறுமார்க்கத்தில், நவ.7 மதியம் 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06534), மறுநாள் அதிகாலை 5:30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் செல்கிறது.

கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், ஓமலுார், தருமபுரி, ஓசூர் வழியாக செல்கிறது.

Advertisement