கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

குஜிலியம்பாறை: அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஒன்றிய மா.கம்யூ., சார்பில் குஜிலியம்பாறையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றியக்குழு உறுப்பினர் பழனிச்சாமி தலைமை வகித்தார். செயலாளர் ஜெயபால், ஒன்றியக்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ராஜரத்தினம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வேடசந்துாரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் பெரியசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பிரபாகரன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சவடமுத்து, செல்வம், ராகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement