அகவிலைப்படி உயர்வு ஆசிரியர்கள் வரவேற்பு
நாமக்கல்:நேரடி
நியமனம் பெற்ற, முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர்
ராமு, தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து, தமிழக அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்
களுக்கும்
தாமதமில்லாமல், ஜூலை, 1 முதல், நடைமுறைக்கு வரும் வகையில், ஏற்கனவே
வழங்கப்பட்டு வந்த, 60 சதவீதம் அகவிலைப்படியை, 3 சதவீதம்
உயர்த்தி, 63 சதவீதமாக வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
அதற்காக, அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
அகவிலைப்படி
உயர்வு மூலம், 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள்,
ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் நேரடியாக
பயன்பெற உள்ளனர்.
அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும்
ஓய்வூதியதாரர்களின் நலனில் தமிழக முதல்வர் காட்டிவரும் அக்கறை,
மேலும் தொடரவும், அவர்களின் நீண்டகால கோரிக்கையான பழைய ஓய்வூதிய
திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை படிப்படியாக நிறைவேற்றவும்,
நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
மின் சேமிப்பு திறன் மேம்பாட்டுக்காக ரூ.14,500 கோடி நிதி ஒதுக்கீடு: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
-
புழுதியூரில் ரூ.2.70 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
-
விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்
-
238 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
-
புதிய பட்டுக்கூடு அங்காடி காணொலி மூலம் திறப்பு
-
சம்பளம் கேட்டு பஞ்., ஆபீஸ் முன் துாய்மை பணியாளர் தர்ணா