முரசு புயல் எதிரொலி: உஷார் நிலையில் ஆந்திரா; 19 விமானங்கள் ரத்து

அமராவதி: வங்கக்கடலில் உருவான முரசு தீவிரப் புயல், இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை ஆந்திராவில் கரையை கடக்க உள்ளது. அப்போது மணிக்கு 100 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேற்கு கோதாவரி, கிருஷ்ணா, குண்டூர், பபட்லா, பல்நாடு, பிரகாசம், நெல்லூர் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்து இருக்கிறது.

பொது மக்கள் அனைவரும் பாதுகாப்பாக வீடுகளில் இருக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் சந்திரபாபு நாயுடு, '' அதிகாரிகள் அனைவரும் உஷாராக இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயாராக இருப்பதுடன், உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மழைநீரை சேமிக்கவும் வழிவகை செய்ய வேண்டும்,'' என அறிவுறுத்தி உள்ளார்.

கிருஷ்ணா மாவட்டத்தில் 31 ஆயிரம் மின்கம்பங்கள் அகற்றப்பட்டுள்ளன. பலத்த காற்றினால் 8 ஆயிரம் மின்கம்பங்கள் பாதிக்கப்படும் என அதிகாரிகள் கணித்துள்ளனர்.

விமானங்கள் ரத்து

முரசு புயல் காரணமாக 19 உள்நாட்டு விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

விஜயவாடாவில் 10, விசாகப்பட்டினத்தில் 4 விமான சேவை ரத்தாகி உள்ளது. திருப்பதியில் இருந்து விஜயவாடா, விசாகப்பட்டினம் செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

Advertisement