ஜெர்மனியில் முன்னணி நிறுவன தலைவர்களுடன் சந்திப்பு; முதலீடுகளை ஈர்க்க அமைச்சர் கீர்த்தனா பேச்சு

14

-நமது நிருபர்-

உலக நாடுகளுடனான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தவும், தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்கவும் மாநில அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஜெர்மனி சென்றார்.

அங்கு முனிச்சில், ஸோல்னர் எலக்ட்ரானிக் ஏஜி மற்றும் அவலான் டெக்னாலஜிஸ் நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்து, தமிழகத்தில் மேம்பட்ட மின்னணு உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கான திட்டங்கள் குறித்து அமைச்சர் கீர்த்தனா ஆலோசனை நடத்தினர்.

அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் அவலான் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்ய ஆதரவளிப்பது உட்பட தமிழக அரசு ஒரு முக்கியப் பங்காற்றியது. கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி வெற்றி மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

முதல்வர் விஜயின் தலைமையில், உலகளாவிய உற்பத்தியாளர்களுக்கு உடனடி வசதிகளையும், தொழில் சூழலையும் வழங்குவதில் தமிழகம் தொடர்ந்து உறுதியாக உள்ளது. உலகளாவிய தலைவர்களின் கவனத்தை ஈர்ப்பது முதல் களத்தில் முதலீடுகளைச் சாத்தியமாக்குவது வரை, தமிழகம் மேம்பட்ட மின்னணு உற்பத்தியின் எதிர்காலத்தைக் கட்டமைத்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் கீர்த்தனா கூறியுள்ளார்.

Advertisement