தீபாவளி இனிப்பு, காரம் தரம் குறைவாக உள்ளதா? புகார் தெரிவிக்க வசதி
சென்னை: கடைகளில் வாங்கும் தீபாவளி பலகாரங்கள் குறித்து, நுகர்வோர்கள் புகார் தெரிவிப்பதற்கு, தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடு முழுதும் தீபாவளி பண்டிகை, 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை களை கட்டும். பல கடைகளில், உணவு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி, இனிப்பு வகைகள் தயாரிக்கப்படுகின்றன.
சில கடைகளில் பழைய எண்ணெய், இரண்டாம், மூன்றாம் தர நெய், டால்டா, காலவதியான பொருட்களை பயன்படுத்தி, இனிப்புகளை தயார் செய்து விற்பனை செய்கின்றனர். இவற்றை ஆர்வமுடன் வாங்கி செல்லும் நுகர்வோர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, நடப்பாண்டு தீபாவளி பண்டிகையின் தரமான பொருட்கள் விற்பனையை உறுதி செய்ய, பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள், மாவட்ட நிர்வாகங்கள் வாயிலாக, விற்பனையாளர்களுக்கு வழங்கப்பட்டு உள்ளது.
அதையும் மீறி, தரம் குறைந்த இனிப்பு மற்றும் கார வகைகளை தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உணவு பாதுகாப்பு துறை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. ‘பேக்கிங்’ செய்யப்பட்ட உணவு பண்டங்களில் அது தயாரிக்கப்பட்ட தேதி, சாப்பிட தகுந்த காலம் உள்ளிட்டவை இருக்க வேண்டும்.
தரமற்ற பொருட்கள் என தெரிந்தால், 94440 42322 என்ற ‘வாட்ஸாப்’ எண்ணில் புகார் அளிக்கலாம். மேலும், foodsafety.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாகவும், tn food safety consumer app என்ற மொபைல் போன் செயலி வாயிலாகவும் புகார் அளிக்க வசதி செய்யப்பட்டு உள்ளது.
மேலும்
-
கோவை சிறை வாசலில் தப்பிய விசாரணை கைதி ராகவன் மீண்டும் கைது
-
நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்கள் தீவிரமாக பங்கேற்க வேண்டும்; ஸ்ரீதர் வேம்பு அழைப்பு
-
தனியார் வசமாகிறதா 'டாஸ்மாக்': பரிசீலனை செய்கிறோம் என்கிறார் அமைச்சர்
-
சபாநாயகர் தனி செயலாளராக ெஹன்றி தாமஸ் நியமனம்
-
பஸ்சில் மூதாட்டி நகைகள் திருட்டு
-
ஹரித்ரா ஹரி சகஸ்ரநாம அறக்கட்டளை ஆண்டு விழா