மக்கள் குறைதீர் கூட்டத்தில்373 மனுக்கள் வழங்கல்
தேனி: மக்கள் குறைதீர் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் 373 மனுக்கள் அளித்தனர்.
தேனி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. டி.ஆர்.ஓ., ராஜகுமார் தலைமை வகித்தார். பெரியகுளம் சப்கலெக்டர் தவலேந்து, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் துஷார் ஸ்ரீஹர் ஷிண்டே, ஏ.டி.எஸ்.பி., கலைக்கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகி குப்புச்சாமி மனுவில், ‘தேனி தாலுகா குப்பிநாயக்கன்பட்டி ஊராட்சி 6 வது வார்டு தென்றல் நகரில் ரேஷன் கடை இல்லாததால் 3 கி.மீ., நடந்து சென்று பொருட்கள் வாங்க வேண்டிய நிலை உள்ளது. இப்பகுதியில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க வேண்டும். சரிவர குடிநீர் வினியோகம் செய்வதில்லை. சீராக வினியோகிக்க நடவடிக்கை எடுக்க,’ கோரினர்.
வி.சி., மாவட்ட செயலாளர் தமிழ்பாண்டியன் மனுவில், தேனி நகராட்சி முதலாவது வார்டில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தப்பட்டிருந்தது.
அல்லிநகரம் 5வது வார்டு கவுன்சிலர் கிருஷ்ணபிரபா மனுவில், ‘தேனி நகராட்சிக்குட்பட்ட பொட்டல் களம் பகுதியில் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 476 குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ள. பணிகள் முடிந்து இரு ஆண்டுகளாகியும் யாரும் குடியேறவில்லை. 2019ல் அப்போதைய துணை முதல்வரிடம் 78 பேர் வீடு கோரி பதிவு செய்து காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். அவர்களுக்கு இந்த வீடுகளை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றிருந்தது. பட்டா, உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 373 பேர் மனு அளித்தனர்.
மேலும்
-
இந்திய பொருளாதாரம் சிறப்பாக செயல்படுகிறது: நிர்மலா சீதாராமன்
-
செஞ்சி ஸ்ரீ பாலாஜி குழுமம் 25 ஆண்டு வெற்றிப் பயணம்
-
புயல் பாதித்த ஏனாமில் மத்தியக் குழு ஆய்வு_ மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க முடிவு
-
ம.பி ராஜ்யசபா இடைத்தேர்தலில் சுயேட்சைக்கு காங். ஆதரவு!
-
இருக்கு... ஆனா இல்ல... போட்டி அரசியலில் கண்டுகொள்ளாத கட்சிகள் பயன்பாடின்றி திண்டிவனம் பஸ் நிலையம்
-
மீனம்பாக்கம் விரிவாக்க திட்டத்தை துரிதப்படுத்த தமிழகம் கோரிக்கை: புதிய விமான நிலைய பணியில் சிக்கல்