டிரைவருக்கு வலிப்புவிபத்தில் சிக்கிய கார்

அந்தியூர்:அந்தியூர் அருகேயுள்ள சின்னத்தம்பிபாளையத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், 45; பயிர்களுக்கு டிரோன் மூலம் மருந்து தெளிக்கும் வேலை செய்கிறார். நேற்று மதியம், 2:00 மணிக்கு அந்தியூரில் இருந்து மாருதி சான்ட்ரோ காரில் வீட்டுக்கு சென்றார். தவிட்டுப்பாளையத்தில் ஒரு மில் அருகில் சென்றபோது, அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர டிரான்ஸ்பார்மர் மீது மோதி பல்டி அடித்து தலைகுப்புற கவிழ்ந்தது.

அப்பகுதியினர் விரைந்து சென்று காரை திருப்பி நிறுத்தி ராஜ்குமாரை மீட்டனர். தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் துாண் சேதமடைந்து டிரான்ஸ்பார்மர் சரிந்து தொங்கியது. விபத்து துகுறித்து அந்தியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement