எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் வேட்புமனு நிராகரிப்பு; போட்டியின்றி எம்பியாகிறார் ஹர்தீப் சிங் புரி
புதுடில்லி: மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின், ராஜ்ய சபா எம்பி பதவிக் காலம் முடிந்தது. அண்மையில் பதவி விலகிய எல்.முருகனுக்கு பதிலாக, மத்திய பிரதேசத்தில் இருந்து ராஜ்ய சபா எம்பி பதவி வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டார்.
இவரை எதிர்த்து காங்கிரஸ் ஆதரவுடன் சுயேட்சைகளான ராஜ்குமார் லோஹானி, காந்தே சாயன்னா வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று வேட்புமனு மீதான பரிசீலனை நடந்தது. ராஜ்குமார், சாயன்னாவின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
வேட்புமனுக்களை திரும்பப் பெற நாளை (நவ.,5) கடைசி நாளாகும். அன்றைய தினமே தேர்தல் முடிவு அறிவிக்கப்பட உள்ளது. ஹர்தீப் சிங் புரி போட்டியின்றி வெற்றி பெறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
பாஜ வேட்பாளர் ஹர்தீப் சிங் புரியின் வேட்புமனுவிலும் பிழைகள் இருப்பதாக எதிர்க்கட்சி வேட்பாளர்கள் குற்றம்சாட்டினர். எந்தவித குறைபாடுகளும் இல்லை என்று தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடப்போவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
எதிர்கட்சி வேட்பாளர்களை தேர்தல் ஆணையத்தின் துணையுடன் தகுதி நீக்கம் செய்து விட்டு வெற்றி பெறுவதற்கு பதில் பதவிவெறி பாஜக வேறு தொழில் பார்க்கலாம் மானங்கெட்டவனுங்க..