மின் சேமிப்பு திறன் மேம்பாட்டுக்காக ரூ.14,500 கோடி நிதி ஒதுக்கீடு: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
புதுடில்லி: நாடு முழுதும் கூடுதலாக 92,000 மெகாவாட் மின் சேமிப்பு திறனை உருவாக்க 14,500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
மேலும், லித்தியம், நிக்கல் உள்ளிட்ட முக்கிய கனிமங்களை உள்நாட்டிலேயே பிரித்தெடுத்து, சுத்திகரிக்க 2,814 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மின் சேமிப்பு கட்டமைப்புகளை மேம்படுத்தும் திட்டம், 2026 - 27 முதல் 2030 - 31 நிதியாண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது.இதற்கான திட்டங்களின் மொத்த முதலீடு 97,600 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போதைய மின் சேமிப்பு திறனுடன் ஒப்பிடுகையில், புதிதாக உருவாக்கப்படும் திறன் 170 சதவீதம் அதிகமாகும்.
சோலார், காற்றாலை வாயிலாக கிடைக்கும் உபரி மின்சாரத்தை சேமித்து, தேவை அதிகரிக்கும் நேரங்களில் பயன்படுத்துவதன் வாயிலாக மின் வினியோக நிலைத்தன்மை மேம்படும். மேலும், 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கவும், வழக்கமான மின் உற்பத்தி ஆதாரங்களை சார்ந்திருப்பதை குறைக்கவும் இத்திட்டம் உதவும்.
முக்கிய கனிமங்களை அவற்றின் தாதுக்களில் இருந்து பிரித்தெடுத்து, சுத்திகரிக்கும் தொழில் நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் திட்டத்தின் கீழ் நிதியளிப்பதற்கா க, 2026 - 27 முதல் 2030 - 31 நிதியாண்டு வரை, ஐந்து ஆண்டுகளுக்கு 2,814 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், இரண்டு லித்தி யம் ஆலைகள், இரண்டு நிக்கல் ஆலைகள் என மொத்தம் நான்கு தொழிற்சாலைகள் நாட்டில் அமைக்கப்படும்.
இதன் வாயிலாக முக்கிய கனிமங்கள் மற்றும் பேட்டரி உற்பத்தியில் இறக்குமதி சார்பை குறைத்து, உள்நாட்டு தொழில்துறையை வலுப்படுத்த முடி யும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
புதிய வீடுகள் மற்றும் கட்டிடங்களை குறைந்த மின்சாரம் பயன்படுத்தும் பசுமை கட்டுமான முறைகளில் திட்டமிட்டு கட்டுவது கட்டாயமாக்கப்பட வேண்டும். கட்டிட அனுமதி விதிகளை திருத்த வேண்டும்.
மரபு சாரா மின் உற்பத்தி என்பது சீரானது அல்ல. அதை சரி செய்ய மின்கலன்கள் மூலம் சேமித்து கிரிடை சமன் செய்வதே நாடு தோறும் பின்பற்றப்படும் வழிமுறை. இதன் மூலம் திட்டமிடப்படாத மின்வெட்டை, தடையை தவிர்க்க முடியும்.மேலும்
-
மின்சாரம் தாக்கி எலக்ட்ரீஷியன் பலி
-
குழாய் உடைந்து சேதம்: வீணாகி வரும் குடிநீர்
-
ஆமை வேகத்தில் வடிகால் பாலம் பணி சாலையில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து
-
வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டம் மாவட்டத்தில் 5 வட்டாரங்களில் தேர்வு
-
ஜல்லி பெயர்ந்ததால் பாடாவதியான சாலை வாகன ஓட்டுனர்கள் கடும் அவதி
-
ஓய்வூதியதாரர்கள் குறைதீர் கூட்டம்