விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் தாலுகா அலுவலகம் எதிரில், விவசாய திட்டங்களின் சலுகைகளை பெறுவதற்கு விவசாயிகளுக்கு அடையாள அட்டை கட்டாயம் என்பதை கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அரூர் ஒன்றிய செயலாளர் நேரு தலைமை வகித்தார். மா.கம்யூ., மாநில குழு உறுப்பினர் குமார், மொரப்பூர் ஒன்றிய செயலாளர் தங்கராஜி பேசினார். ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகள் அடையாள எண் இருந்தால்தான் உரம் வாங்க முடியும், பயிர் காப்பீடு செய்ய முடியும் என்ற மத்திய அரசின் உத்தரவை கண்டித்தும், தமிழகத்தில் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு, எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, குத்தகை, அரசின் பல்வேறு வகை புறம்போக்கு நிலங்கள், விவசாய நிலங்கள், வனங்கள், மலை அடிவாரங்கள், கோவில் மற்றும் இனாம் நிலங்களில் பயிர் செய்யும்
விவசாயிகள் உட்பட பல லட்சக்கணக்கான விவசாயிகள் இன்னும் அடையாள அட்டை பெற முடியாமல் உள்ளனர்.
இந்நிலையில், மத்திய, மாநில அரசின்
உத்தரவை கட்டாயமாக்கினால் மேற்கண்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பழைய முறைப்படி அரசின் சலுகைகள் தொடர வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.

Advertisement