238 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
பென்னாகரம்: பென்னாகரத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தில், 238 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நேற்று நடந்தது. பென்னாகரம், த.வெ.க., - எம்.எல்.ஏ., கஜேந்திரன் தலைமை வகித்தார். விழாவில் பங்கேற்ற, 238 கர்ப்பிணிகளுக்கும் சந்தனம் பூசி, வளையல் அணிவித்து பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடத்தப்பட்டது. தொடர்ந்து, தாம்பூலத்துடன் சீர்வரிசை பொருட்களும், கர்ப்பிணிகளுக்கு, 7 வகையான உணவு களும் வழங்கப்பட்டன.
கர்ப்பிணிகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்குதல், தாய் மற்றும் சேய் நலனை பாதுகாத்தல், கர்ப்ப கால பராமரிப்பு மற்றும் அரசின் நலத்திட்டங்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.நிகழ்ச்சியில், பென்னாகரம் வட்டார மருத்துவ அலுவலர் ராமதாஸ், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
மின் சேமிப்பு திறன் மேம்பாட்டுக்காக ரூ.14,500 கோடி நிதி ஒதுக்கீடு: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
-
புழுதியூரில் ரூ.2.70 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
-
விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்
-
புதிய பட்டுக்கூடு அங்காடி காணொலி மூலம் திறப்பு
-
சம்பளம் கேட்டு பஞ்., ஆபீஸ் முன் துாய்மை பணியாளர் தர்ணா
-
திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு