புதிய பட்டுக்கூடு அங்காடி காணொலி மூலம் திறப்பு
தர்மபுரி: தர்மபுரியில், பென்னாகரம் சாலையில் சோகத்துாரில் அரசு பட்டுப்பண்ணை வளாகத்தில், 19.20 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக அரசு பட்டுக்கூடு அங்காடி அமைக்கப்பட்டது.
80,000 சதுர அடி பரப்பளவில் பட்டுக்கூடு விற்பனை மற்றும் கொள்முதல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில், நவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் இந்த அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தில், பட்டுக்கூடு விற்பனைக்கான பிரத்தியேக கட்டடம், ஆண், பெண் விவசாயிகள் மற்றும் பட்டு நுாற்பாளர்களுக்கென தனித்தனி காத்திருப்பு கூடங்கள், உணவகம், வாகன நிறுத்துமிடம், அணுகுசாலை, பட்டு வளர்ப்புக்கு தேவையான இடுபொருட்கள் விற்பனை மையம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வளாகத்தை சென்னையில் இருந்த படி காணொலி முறையில், தமிழக முதல்வர் விஜய் நேற்று திறந்து வைத்தார். அதை தொடர்ந்து, அங்காடி வளாகத்தில், மாவட்ட கலெக்டர் சரவணன் குத்துவிளக்கேற்றி வைத்து வளாகத்தை பார்வையிட்டார். நிகழ்ச்சியில், சேலம் பட்டு வளர்ச்சித் துறை துணை இயக்குனர் அப்துல் பரூக்,
தர்மபுரி பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் கஸ்துாரி, செயற்பொறியாளர் பன்னீர்செல்வம், உதவி செயற்
பொறியாளர் ராஜ்குமார், தர்மபுரி தாசில்தார் சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
மின் சேமிப்பு திறன் மேம்பாட்டுக்காக ரூ.14,500 கோடி நிதி ஒதுக்கீடு: ஒப்புதல் அளித்தது மத்திய அமைச்சரவை
-
புழுதியூரில் ரூ.2.70 கோடிக்கு கால்நடைகள் விற்பனை
-
விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டம்
-
238 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
-
சம்பளம் கேட்டு பஞ்., ஆபீஸ் முன் துாய்மை பணியாளர் தர்ணா
-
திருமணம் செய்வதாக பெண்ணை ஏமாற்றிய வாலிபர் மீது வழக்கு