டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்

ஆண்டிபட்டி: டி.பொம்மிநாயக்கன்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி என்.எஸ்.எஸ்., மற்றும் சாரண சாரணீய மாணவர்கள் சார்பில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. பள்ளி வளாகத்தில் துவங்கிய ஊர்வலத்தில் தலைமை ஆசிரியர் நடேசன் தலைமை வகித்தார். என்.எஸ்., திட்ட அலுவலர்கள் பாலமுருகன், சரவணன் முன்னிலை வகித்தனர். டெங்கு விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி கிராமத்தின் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் சென்றனர். வீடு, சுற்றுப்புறத்தை சுத்தம் செய்தல், தண்ணீர் தொட்டிகளை பாதுகாத்தல், டெங்கு பாதிப்பின் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் முருகானந்தம் ஊர்வலத்தை வழிநடத்தினார்.

Advertisement