கூட்டுறவு கடன் சங்கங்களில் உரம் இருப்பு

சிவகங்கை: நடப்பு சாகுபடிக்கு தேவையான உரம் தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் இருப்பு உள்ளதாக கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத் தெரிவித்தார். அவர் கூறியதாவது, மாவட்ட அளவில் நடப்பு சாகுபடி பருவத்திற்கு தேவையான யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், காம்ப்ளக்ஸ் உரங்கள் மற்றும் டான்பெட் நிறுவன தயாரிப்பான வேப்பம் விதைத்துாள், கலப்பு உரங்கள், நீரில் கரையும் உரம், உயிர் உரம், பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் நுண்ணுாட்ட சத்து உரங்கள் இருப்பு உள்ளது. தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் அரசு நிர்ணயித்த விலையில் விற்கப்படும். விவசாயிகள் ஆதார் அட்டை, நில ஆவணம் 10(1) நகல், ஆதாருடன் இணைத்த அலைபேசி எண்ணுடன் அந்தந்த பகுதி தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்களில் உரங்களை செயலி மூலம் பெறலாம் என்றார். ///

Advertisement