வடக்கு தாலுகா மீண்டும் முதலிடம்
மதுரை: பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களுக்கு தீர்வு காண்பதில் மதுரை வடக்கு தாலுகா கடந்த மாதமும் மாநில அளவில் முதலிடம் பெற்றுள்ளது.
தமிழக வருவாய்த் துறையில் ஒவ்வொரு மாதமும் பட்டா மாறுதல் உட்பட பல்வேறு மனுக்கள் அனைத்து தாலுகாகாக்களிலும் குவிந்து வருகின்றன. இவற்றில் பட்டா மாறுதல் மனுக்களே அதிகம் வருகின்றன. இவற்றுக்கு தீர்வு காண ஊழியர்கள் பற்றாக்குறையால் வருவாய்த்துறை திணறுகிறது. இருப்பினும் மனுக்களுக்கு தீர்வு காண்பதில் மதுரை வடக்கு தாலுகா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.
கடந்த அக்டோபர் மாதத்தில் 1943 மனுக்கள் வரப்பெற்றதில் 1500 பட்டா மாறுதல் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு முதலிடம் பெற்றுள்ளது. 443 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 2வது இடத்தில் திருவள்ளூர் தாலுகா (1399 மனுக்கள்), மூன்றாம் இடத்தில் ஓசூர் (1261) தாலுகாவும் இடம்பிடித்துள்ளன. வடக்கு தாசில்தார் கமலேஷை, கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா உட்பட அதிகாரிகள் பாராட்டினர்.
மேலும்
-
பிரபல ரவுடி குண்டாசில் கைது
-
போக்குவரத்து விதி மீறிய 25 ஆயிரம் பேருக்கு அபராதம்: சீனியர் எஸ்.பி., திவ்யா
-
அரசு கல்லுாரி டாக்டர் மீது மருத்துவ மாணவியர் புகார்
-
விழாவுக்கு மேயரை அழைக்காத கமிஷனர் அமைச்சர் முன் தி.மு.க., கவுன்சிலர் ‘லடாய்’
-
சிறு தொழிலுக்கு உதவ மாவட்ட அளவில் கண்காணிப்பு குழு அமைக்க அரசு உத்தரவு
-
அரசு காப்பீட்டில் ‘டயாலிசிஸ்’ கட்டணம் கேட்டு அலைக்கழிப்பு