கிரிமினல் கோர்ட் வக்கீல் சங்க கிரிக்கெட் போட்டி

கோவை: கோவை கிரிமினல் கோர்ட் வக்கீல் சங்கத்தின் தலைவர் மறைந்த மருது பாண்டியன் நினைவு கிரிக்கெட் போட்டி, பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்தது. வழக்கறிஞர்களுக்கிடையே நடந்த போட்டியில், 18 ஆண் வக்கீல்கள் அணியும், இரண்டு பெண் வக்கீல்கள் அணியும் பங்கேற்றன. போட்டியில், சி.பி.ஏ. சிசி அணியினர் முதல் பரிசு பெற்று சுழற்கோப்பை வென்றனர். இரண்டாம் பரிசை வின்ரோஸ் அணியினரும், மூன்றாம் பரிசை வாழவந்தான் அணியினரும் பெற்றனர். வெற்றி பெற்ற அணிக்கு, கிரிமினல் கோர்ட் வக்கீல் சங்க துணை தலைவர் கீர்த்திவாசன், செயலாளர் கவுதமன் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.

Advertisement