இரும்பு பைப் திருட்டு

கடலுார்: நிலத்தில் இருந்த ரூ. 70 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பொருட்களை திருடிய நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

கடலுார் அடுத்த எம்.புதுாரைச் சேர்ந்தவர் அருள்நாதன்,60; இவர் நேற்று (நவ.,1) குமாரப்பேட்டையில் உள்ள தனது நிலத்திற்கு சென்றார். அங்கு மோட்டார் கொட்டகையில் வைத்திருந்த மோட்டார், 4 கிலோ கேபிள் மற்றும் 35 கிலோ இரும்பு பைப்புகள் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு ரூ.70 ஆயிரம் ஆகும்.

புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertisement