வங்கதேச ஊடுருவல்காரார்களை பாதுகாக்கும் காங்; அமித் ஷா குற்றச்சாட்டு

4

ஹைதராபாத்தில், ஜனநாயகத்தை காப்போம், அராஜகத்தை ஒழிப்போம் என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்ட பாதயாத்திரைக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது;

கள்ள ஓட்டுப்பதிவு வழியாக, தேர்தலை நடத்த காங்கிரஸ் விரும்புகிறது. ஒருவருக்கு இரு ஓட்டுகள் இருந்தால் அவற்றில் ஒன்றை ரத்து செய்ய வேண்டாமா? எஸ்ஐஆரில் நீக்கப்பட்ட 3 கோடி ஓட்டுகள் வங்கதேச ஊடுருவல்காரர்கள்.

பார்லி. சிறப்புக் கூட்டத்தை கூட்டுவதற்கு மத்திய அரசு தயாராக உள்ளது. ஆனால் அதை ராகுல் விரும்பமாட்டார், அவர் அதில் பங்கேற்க மாட்டார். நாட்டில் ஒரு குழப்பமான சூழலை உருவாக்க ராகுல் விரும்புகிறார். பார்லி.செயல்பட்டால் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை விவாதத்தால் பிரதமர் மோடி தோற்கடிப்பார்.

காங்கிரஸ் ஒரு வெண்டிலேட்டரில் இருக்கும் கட்சி. பிரதமர் மோடியுடன் மராத்தான் ஓட முடியாது. இவிஎம்மில் குறைபாடு என்றால் ரேவந்த் ரெட்டி எப்படி முதல்வரானார்? கேரளா, தமிழகம், ஹிமாச்சல பிரதேசத்தில் காங்கிரசின் அரசு எப்படி ஆட்சிக்கு வந்தது?

ஒட்டுமொத்த தெலுங்கானாவையும் டில்லி காங்.தலைவர்களுக்கான ஏடிஎம் ஆக ரேவந்த் ரெட்டி மாற்றி இருக்கிறார். தெலுங்கானா மக்கள் இதை மன்னிக்கவே மாட்டார்கள். ராகுல் 6 வாக்குறுதிகளை அளித்தார். அதில் ஒன்றை கூட அவர் நிறைவேற்றவில்லை.

பிரதமர் மோடி பயங்கரவாதம் ஒழிக்கப்படும் என்றார். சர்ஜிக்கல் ஸ்டிரைக், ஆபரேஷன் சிந்தூர் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்தோம். 2029ம் ஆண்டு டிச.31ம் தேதிக்குள் இந்தியாவை போதைபொருள் இல்லாத நாடாக மாற்றுவோம் என்று உறுதி அளிக்கிறேன். தெலுங்கானாவில் நடைபெறும் ஊழலை பிரதமர் மோடி தலைமையிலான பாஜவினால் மட்டுமே தடுக்க முடியும்.

இவ்வாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.

Advertisement