அடுத்தடுத்து தர்ணா போராட்டம் :கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

விழுப்புரம்: விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அடுத்தடுத்து பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

வானுார் அடுத்த பொம்பூர் அரசு ஆதிதிராவிடர் நல துவக்கப்பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (நவ.,2) காலை விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கடந்த 1929ம் ஆண்டு துவங்கப்பட்ட இப்பள்ளியில் தற்போது 63 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளியில் சுற்றுச்சுவர் வசதி இல்லை. இதற்காக தாட்கோ மூலம் நிதி ஒதுக்கியும் பணிகள் நடக்கவில்லை. மாணவர்களின் பாதுகாப்பு கருதி ஆக்கிரமிப்புகளை அகற்றி சுற்றுச்சுவர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இக்கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு கலைந்து சென்றனர்.

Tamil News


மற்றொரு தர்ணா





திண்டிவனம் அடுத்த ஆவணிப்பூரைச் சேர்ந்தவர் குமாரசெல்வம், 75; இவரது பிரேமாவதி, 70; தங்கை கலையரசி, 60; ஆகியோருடன் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டார். அப்போது, தங்கள் குடும்ப சொத்தை தனிநபர் ஆக்கிரமித்து பட்டா வாங்கியதை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

போலீசார் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, இக்கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்து விட்டு கலைந்து சென்றனர். அடுத்தடுத்த தர்ணா போராட்டத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு நிலவியது.

Advertisement