இலவச புடவை வழங்கும் விழா

பிராமண சமூகத்தின் நலிவடைந்த பிராமண பெண்களுக்கு உதவிபுரிய தமிழ்நாடு பிரமண சமாஜம் மாநில தலைவர் ஹரி ஹர முத்தய்யர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதன் படி மதுரை மாவட்டம் மற்றும் கிளைகளின் சார்பில் மதுரை எஸ் . எஸ். காலனி சத்சங்கத்தில் புடவை வழங்கும் விழா நடைபெற்றது.

தமிழ்நாடு பிராமணர் சமாஜம் மதுரை மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஸ்ரீராமன் முன்னிலை வகித்தார். நிகழ்வில் மாநில ஆலோசகர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் புதூர் வி ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று புடவை பெண்மணிகளுக்கு இலவச புடவை வழங்கினார்.

மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளைகளின் சார்பில் 150 பெண்கள் பயனடைந்தார்கள். இதில் மாவட்ட ஆலோசகர் நெல்லை பாலு,மதுரை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை தலைவர்கள் வெங்கடேசன் சாம்பசிவம் குழந்தைசாமி சுப்ரமணியன் கண்ணன் -ராமமூர்த்தி ராஜகோபாலன் மற்றும் விஜயராகவன் மற்றும் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ ராமன் செய்திருந்தார்.

Advertisement