சேலம் சீலநாயக்கன்பட்டியில் 'உதயம்' வேட்டி, சட்டை ேஷாரூம் திறப்பு விழா

சேலம்: பாரம்பரியத்தில் புதுமை படைத்து வரும், உதயம் வேட்டி சட்டை நிறுவனத்தின், 16வது கிளை சேலம் சீலநாயக்கன்பட்டியில் திறக்கப்பட்டது.

சேலம் சீலநாயக்கன்பட்டி, அமானி கொண்டலாம்பட்டி, ஆட்டோ நகரில் உதயம் வேட்டி சட்டை ேஷாரூமை சேலம், ஜி.டி.பி., நிறுவனங்களின் தலைவர் முத்துராஜன் நேற்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவில், சேலம் சிகரம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிர்வாக இயக்குனர் சுகுமார் குத்துவிளக்கு ஏற்றினர். முதல் விற்பனையை சேலம் கே.எம்.பி., குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் முகமது யாசின் மற்றும் சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி ஆகியோர் தொடங்கி வைத்தனர். சேலம் ஏசியன் பைப்ஸ் குவாலிட்டி ஸ்டீல் நிர்வாக இயக்குனர் அஸ்ரப், சேலம் ஷீரடி சாய் பாபா ரியல் எஸ்டேட் நிர்வாக இயக்குனர் கோபி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
உதயம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அருண்ஈஸ்வர் வரவேற்று பேசுகையில், ''இன்று திறக்கப்பட்டுள்ள புதிய ேஷாரூமில், பாரம்பரியமான உயர்தர பருத்தி வேட்டிகள், சட்டை, திருமண தொகுப்பு, ஜோடி ஆடைகள் மட்டுமன்றி, சட்டை மற்றும் 'கோட் சூட்' தைக்க தேவைப்படும் அனைத்து வகையான துணிகள் கிடைக்கும். மேலும் மணமக்களுக்கு தேவையான பட்டு வேட்டி சட்டை, 'டிஷ்யூ' வேட்டி சட்டை, ரவிக்கை, துண்டு, உள்ளாடை, பாக்கெட் வைத்த வேட்டி, 'ஜென்ஸி'க்கள் மற்றும் குட்டீஸ்களை கவர்ந்த 'ஒட்டிக்கோ கட்டிக்கோ' வெல்குரோ வேட்டிகள் கிடைக்கும்,''.
என்றார்.

Advertisement