ம.பி ராஜ்யசபா இடைத்தேர்தலில் சுயேட்சைக்கு காங். ஆதரவு!

1

மத்திய பிரதேசத்தில் நடைபெற இருக்கும் ராஜ்ய சபா இடைத்தேர்தலில் பாஜ வேட்பாளராக மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் புரி போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக சுயேட்சை வேட்பாளர் ராஜ்குமார் லோஹானி வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

கடைசி நாளான இன்று வேட்பு மனு தாக்கல் செய்த லோஹானிக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவை வழங்கி உள்ளது. தேர்தல் அதிகாரியிடம் அவர் வேட்பு மனு தாக்கல் செய்த போது, எம்எல்ஏக்கள் ஹேமந்த் கட்டாரே, ஆதிப் அகில், அபிஜித் ஷா, சுரேந்திர சிங் ஹனி பாகேல், செய்தி தொடர்பாளர் விவேக் திரிபாதி ஆகியோர் உடனிருந்தனர்.

ராஜ்யசபா இடைத்தேர்தலில் வெற்றி பெறும் எண்ணிக்கையிலான உறுப்பினர்கள் காங்கிரசுக்கு இல்லை. எனவே சுயேட்சைக்கு காங்கிரஸ் ஆதரவை அளித்து இருக்கிறது.

மொத்தம் 230 உறுப்பினர்களை கொண்ட மத்திய பிரதேச சட்டமன்றத்தில் ஒரு ராஜ்யசபா எம்பி இடத்தில் வெற்றி பெற 116 ஓட்டுகள் தேவை. சட்டசபையில் 164 எம்எல்ஏக்களுடன் பெரும்பான்மை இருப்பதால் ஹர்தீப் சிங் புரி வெற்றி நிச்சயம் என்று பாஜவினர் கூறி உள்ளனர்.

ராஜ்யசபா இடைத்தேர்தல் நவ.12ம் தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை அன்றைய தினம் மாலை 5 மணிக்கும் தொடங்கும்.

Advertisement